தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடைபெறுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இதன்பின் ஆட்சியர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதில் விளாத்திகுளம் தொகுதியில் 2, 13,364 வாக்காளர்களும் தூத்துக்குடியில் 2,78,961 வாக்காளர்களும் திருச்சந்தூரில் 2,39,975 வாக்காளர்களும் ஸ்ரீவைகுண்டத்தில் 2,23,550 வாக்காளர்களும் ஒட்டப்பிடாரத்தில் 2,44,576 வாக்காளர்களும் கோவில்பட்டியில் 2,55,513 வாக்காளர்களும் இருக்கின்றார்கள். மொத்தமாக 14,55,969 வாக்காளர்கள் இருப்பதாக கூறியுள்ளார்.