நடிகை பிரியங்கா சோப்ரா பேட்டியில் ஓபன் ஆக பேசியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து சென்ற 2018 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸ் அமெரிக்க பாடகர் ஆவார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள்.
இந்த நிலையில் இவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, முதல் திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு 18 வயது. அப்போது நான் செட்டில் சன்னி தியோலுடன் நடித்த போது எனக்கு நடுக்கம் தான் ஏற்பட்டது. காரணம் அவரின் படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன்.
நான் சினிமாவில் நடிப்பேன் என நினைத்து கூட பார்த்ததில்லை. அழகி போட்டியில் வென்ற பிறகு என் வாழ்க்கையின் திசையே மாறியது. என்னுடைய கனவு உலக புகழ் பெற்ற நடிகை ஆவது கிடையாது. ஆனால் அது தற்போது நடந்து விட்டது. நான் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் பெரிய கதாபாத்திரங்களை அடைய அது தேவையான ஒன்றே. இது மிகவும் எளிதானது என அனைவரும் எண்ணுகின்றார்கள்.
இதற்காக நான் மிகவும் பணிவாக நடந்து கொண்டேன். நான் பல அதிசயங்களில் கலந்து கொண்ட போது நிராகரிக்கப்பட்டேன். ஆனால் நான் என் முயற்சியை கைவிடவில்லை. இதற்கு நான் வருந்தவும் இல்லை. உண்மையில் பெருமைப்படுகின்றேன். ஒவ்வொரு நாளும் பெரிய கனவாக இருக்க வேண்டும்.
நான் சினிமாவில் நுழைந்தபோது நான் அழகாக இல்லை. வித்தியாசமாக கருப்பாக இருப்பதாக பலரும் தெரிவித்தார்கள். நான் இயல்பிலிருந்து சற்று விலகி இருந்தேன், அவ்வளவுதான். நாம் அனைவருமே இங்கு முரண்பாடுகள் தான்.
நம்ம அனைவருக்கும் சொந்த தேவைகள் கனவுகள் ஆசைகள் இருக்கின்றது. ஒரு நடிகரோட வேலை உண்மையில் நடிப்பது தான். நான் பலதரப்பட்ட விஷயங்களை செய்ய விரும்புகின்றேன். நடிப்பு பள்ளியில் தான் என்னுடைய விருப்பம் இருக்கிறது. இதை தான் நான் இப்போதும் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.