சேலையூர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளார்கள்.
சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 65-வது வார்டு குட்பட்ட சேலையூர் சீனிவாச நகர் விரிவு பகுதியில் சென்ற 10 நாட்களுக்கு மேலாக மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது.
சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் கல்லூரி மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். ஆகையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றார்கள்.