Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் தற்காலிக அனுமதி சான்று திட்டம்…. அதிகாரி ஆய்வு….!!!

போக்குவரத்து சோதனைசாவடிகளில் ஆன்லைன் தற்காலிக அனுமதிசான்று திட்டத்தை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசு சார்பாக மாநில எல்லையில் போக்குவரத்து சோதனைசாவடி அமைக்கப்பட்டிருக்கின்றது. வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் இந்த சோதனை சாவடிகளில் தற்காலிக அனுமதி சான்று வழங்கப்படுகின்றது. இதன் மூலம் வரி செலுத்தாத மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகின்றது.

இதற்கான தொகை நேரடியாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சோதனை சாவடிகளில் நேரடி பண பட்டுவாடா இல்லாத முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. தற்போது தற்காலிக அனுமதிச்சான்று பெறுவதற்கு ஆன்லைனில் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. பொள்ளாச்சி அருகே இருக்கும் கோபாலபுரம் போக்குவரத்து சோதனை சாவடிகளில் இத்திட்டமானது நேற்று முன்தினம் முதல் ஆரம்பமானது. இதனை போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் ஆய்வு மேற்கொண்டார்.

Categories

Tech |