வாடகை தாய்க்குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதில் அளித்து இருக்கின்றார்.
முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சென்ற ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இதன் பிறகு தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்ற அக்டோபர் 9-ம் தேதி பகிர்ந்தார். இதன் பிறகு வாடகை தாய் மூலம் குழந்தைகள் பிறந்து இருப்பதாக செய்தி வெளியானது.
இதை அவர்களும் மறுக்கவில்லை. இந்த விஷயத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், சென்ற 2016 ஆம் வருடத்திலேயே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் சென்ற 2021 ஆம் வருடம் டிசம்பர் மாதம் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு பதிவு செய்ததாகவும் செய்தி வெளியானது.
இது குறித்து பலரும் கருத்து கூறி வந்த நிலையில் யசோதா திரைப்பட பிரமோஷனுக்காக நேர்காணலில் பங்கேற்ற நடிகை சமந்தாவிடம் இது குறித்து (வாடகைத் தாய்) கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியுள்ளதாவது, எனக்கு எதைப் பற்றியும் கருத்துக்கள் கிடையாது. நீங்கள் எதையாவது மாற்றச் சொன்னால் கூட மாற்றிக் கொள்வேன். என்ன செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றதோ அதையே செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.