Categories
சினிமா தமிழ் சினிமா

அடி, உதையெல்லாம் வாங்கி இருக்காங்க நிதி அகர்வால்…. பல திடுக்கிடும் தகவலை கூறிய உதயநிதி….!!!!

இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஜாலியாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள்.  இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழு பலர் கலந்து கொண்டார்கள். அப்போது பேசிய உதயநிதி இந்த படத்திற்கு என்னை விட அதிகமாக உழைத்தது ஹீரோயின் நிதி அகர்வால் தான். என்னை விட அதிக காட்சிகளில் அவர் தான் நடித்திருக்கின்றார். இனி அவர் தமிழ் படத்தில் நடிப்பாரா என தெரியவில்லை. அந்த அளவிற்கு அடி, உதையெல்லாம் வாங்கி இருக்கின்றார்.

நான் தான் சினிமாவை தாங்கிக் கொண்டிருக்கிற மாதிரி எல்லோரும் நடிப்பை விட்டு விடாதீர்கள் என வலியுறுத்துகின்றார்கள். நான் இப்போதுதான் நடிக்கவே ஆரம்பித்திருக்கின்றேன். நான் நடித்த படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிங்க என கூறுகிறார்கள். ஆனால் எனக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கின்றது. ஆகையால் மாமன்னன் திரைப்படத்தை முடித்துவிட்டு செல்போன் நம்பரை மாற்றி விட்டு எஸ்கேப் ஆகப் போகின்றேன் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |