ஓட்டப்பிடாரம் அருகே காரில் புகையிலை பொருட்களை கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் அருகே இருக்கும் பசுவந்தனையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி அதில் இருந்து மூன்று பேரிடம் போலீசார் விசாரணை செய்தார்கள்.
மூன்று பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகம் அடைந்து காரை சோதனை செய்ததில் சாக்கு மூட்டையில் 1650 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. அவர்கள் புகையிலை பொருட்களை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் வந்த சென்னை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், லட்சுமண பெருமாள், அழகு ராஜ் உள்ளிட்டோரை கைது செய்தார்கள். மேலும் புகையிலை பொருட்களையும் காரையும் பறிமுதல் செய்தார்கள்.