திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கல்வி கடன் குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு பகுதி சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறுவதற்காக கல்லூரி படிப்பிற்கான கல்வி கடன் பெற சிறப்பு முகாம் சென்ற 2 நாட்களாக நடைபெற்றது.
இம்முகாமில் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் கல்விக்கடன் பெறுவதற்காக கலந்து கொண்டார்கள். இந்த முகாமில் மொத்தமாக 440 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் 325 மாணவர்களுக்கு 10.39 கோடி அளவில் கடன் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த முகாமில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்து விரைந்து கல்வி கடன் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டிருக்கின்றது.