Categories
திருவண்ணாமலை தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே…! ஆதாருடன் வங்கிக் கணக்கு, செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்…. 30-ம் தேதியே கடைசி…!!!

ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டத்தில் தொடர்ந்து நிதி பெறுவதற்கு ஆதார உடன் வங்கி கணக்கு, செல்போன் எண்ணை வருகின்ற 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சென்ற 2018 ஆம் வருடம் முதல் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக ரூபாய் 2000 வீதம் வருடத்திற்கு 6000 வழங்கப்படுகின்றது.

இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 12 தவணைகள் தொகை விடுவிக்கப்பட்டிருக்கின்றது. அடுத்த தவணையை பெற வேண்டும் என்றால் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை வருகின்ற 30ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்வது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்து இருக்கின்றது. ஆகையால் இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உடனடியாக பொது சேவை மையம் மற்றும் தபால் நிலையங்களுக்கு சென்று பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என வேளாண்மை இணை இயக்குனர் பாலா கூறியுள்ளார்.

Categories

Tech |