Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

15 வருஷமா பேருந்து இல்லை…. 4கி.மீ நடந்தே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்… கிராம மக்கள் கோரிக்கை…!!!!!

15 வருடங்களாக பேருந்து இல்லாததால் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று மாணவ-மாணவிகள் படித்து வருகின்றார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவலாங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பாக்கம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இந்த ஊராட்சி ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள நிலையில் அரசு பள்ளிகள் ஏதும் இல்லை. இதனால் கல்வி கற்பதற்காக மாணவர்கள் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆற்காடு குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று பயின்று வருகின்றார்கள்.

மேலும் கல்லூரி படிக்கும் மாணவர்களும் ஆற்காடு குப்பம் வரை நடந்து சென்று அங்கிருந்து திருத்தணியில் இருக்கும் கல்லூரிக்கு செல்ல வேண்டி இருக்கின்றது. இந்த ஊராட்சியில் இருந்து ஆற்காடு குப்பம் வரை சென்ற 15 வருடங்களாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்குவதில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பேருந்து வசதி இல்லாமல் நடந்து சென்றே பயின்று வருகின்றார்கள்.

இதுபோல கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. ஆகையால் ஆற்காடு குப்பத்திலிருந்து அரும்பாக்கம் ஊராட்சி வரை பள்ளி நேரங்களான காலை மற்றும் மாலையில் மட்டும் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளார்கள்.

Categories

Tech |