நாக சைதன்யாவின் சாதனையை சமந்தா முறியடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்போது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் சமந்தா நடிப்பில் நேற்று யசோதா திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. ஹைதராபாத்தில் முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் மட்டும் ரூபாய் 65 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்திருக்கின்றது. சமீபத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான தேங்க்யூ திரைப்படம் ஹைதராபாத் அட்வான்ஸ் புக்கிங்-ல் 63 லட்சம் மட்டுமே வசூல் செய்தது. இந்த நிலையில் தனது மாஜி கணவரின் வசூல் சாதனையை சமந்தா முறியடித்து இருக்கின்றார். இதன் மூலம் நாகா சைத்தன்யாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு இருக்கின்றார் சமந்தா.