மீனம் ராசி அன்பர்களே..! இன்று எவரையும் நீங்கள் ஏமாற்ற நினைக்காமல் தன் வேலை உண்டு, நீங்கள் உண்டு என்று மிகவும் நேர்மையாக செயல்படுவீர்கள். உங்களுடைய மனைவியின் சின்ன, சின்ன கழகத்தால் உறவுகளுக்குள் குழப்பங்கள் இருக்கும். அதிகாரிகளிடம் கொஞ்சம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும், இருந்தாலும் சின்ன, சின்ன பூசல்களும் வந்து தான் செல்லும். கூடுமானவரை அவர்களிடம் பேசும்போது கொஞ்சம் அன்பாக பேசுங்கள், வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதிற்கு இதமளிக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். ஆர்வம் மிகுந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். நல்ல மதிப்பெண்கள் எடுக்க கூட தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் மனதை மட்டும் அமைதியாக வைத்துக் கொள்வதற்கும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
கூடுமானவரை இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களைப் படியுங்கள், நினைவில் வைத்துக் கொள்ள உதவும். அதுபோலவே தேர்வு முடியும் வரை நீங்கள் காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டு, பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், இரவில் தூங்க செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்வது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்