Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி நேஷனல் பொறியல் கல்லூரி சார்பாக…. “வாக்காளர் விழிப்புணர்வு” ஊர்வலம்…!!!!!!

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பாக நடைபெற்றது.

பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தேர்தல் பிரிவு சார்பாக நேஷனல் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக ஆரம்பமானது.

இதனை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியபடி கோஷமிட்டு சென்றார்கள். இந்த ஊர்வலமானது கோவில்பட்டி மெயின் ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதன்பின் உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வாக்குரிமை குறித்து உரையாற்றினார். இதில் வருவாய் அலுவலர், வருவாய்த்துறையினர், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |