Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சேர்ந்து வாழத்தான் முடியல…. உடலையாவது கொடுங்க…. மாலத்தீவில் இறந்த பெண்ணின் கணவர் உருக்கம்….!!!!!

எனது மனைவியின் உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மாலத்தீவில் இறந்த பெண்ணின் கணவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாலத்தீவில் தீ விபத்து ஏற்பட்டதில் 13 பேர் இறந்து போனார்கள். இதில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு தாலுக்கா மலையனூர் மல்காபூர் கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழியும் ஒருவராவார். இவரின் கணவர் பாலகிருஷ்ணன். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே இருக்கும் பையர் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சென்ற 20 வருடங்களுக்கு முன்பாக தேன்மொழியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயப்பிரகாஷ் மற்றும் ஜெயப்பிரியா என இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள்.

கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் சென்ற பத்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். பின் வருமானத்திற்காக தேன்மொழி மாலத்தீவுக்கு சென்று இருக்கின்றார். தேன்மொழி இறந்தது பற்றி அவரின் கணவர் கூறியுள்ளதாவது, சென்ற பத்து வருடங்களுக்கு முன்பாக ஏற்பட்ட சிறிய சண்டையில் இருவரும் பிரிந்து வாழ்ந்தோம். பின் கொரோனா ஊரடங்கின் முன்பாக இரு வீட்டாரும் சமாதானம் பேசியதில் நாங்கள் இருவரும் இணைந்தோம்.

அதன் பின் கடன் பிரச்சனை காரணமாக எனது மனைவி மாலத்தீவுக்கு செல்கிறேன் என கூறி விட்டுச் சென்றார். அவர் இறந்த செய்தி கூட எனக்கு மறுநாள் தான் தெரியும். நான் எனது மனைவியுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ஆகையால் எனது மனைவிக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக அவரின் உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

சென்ற பத்து வருடங்களாக எனது மனைவி வெளிநாட்டில் வேலை செய்தாலும் அவரிடம் இருந்து நான் இதுவரை பணம் வாங்கியதில்லை. அதற்கு ஆசைப்பட்டதும் இல்லை. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அவர் வந்து போவார். அப்போது கூட அவர் என்னிடம் சரியாக பேசியதில்லை. எனது பிள்ளைகளும் என்னுடன் இல்லாத நிலையில் என் மனைவியும் இறந்த இந்த துக்கம் எனக்கு மிகுந்த வேதனையை தருகின்றது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |