சிஎம்சி மருத்துவ மாணவர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி மருத்துவ கல்லூரியில் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் அரை நிர்வாணப்படுத்தி டவுசர் உடன் விடுதி வளாகத்தில் ஓட விட்டு ராக்கிங்யில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் குட்டி கரணம் அடித்தல், தண்டால் எடுத்தல், மாணவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க செய்தல் என அவர்களை கொடுமை செய்திருக்கின்றார்கள்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கல்லூரி நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இதை அடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டு சீனியர் மாணவர்கள் 7 பேரை இடைநீக்கம் செய்தார்கள். மேலும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஏழு மாணவர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இந்த 7 மாணவர்களின் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், மற்ற 6 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளார்கள். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.