Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போதைப் பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து… அறிவிப்பு பலகை வைக்க ஆட்சியர் உத்தரவு…!!!!!

கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேலூரில் இருக்கும் அனைத்து கடைகளிலும் போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் சில வியாபாரிகள் கள்ளத்தனமாக தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்கின்றார்கள். இதனால் நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு குழுக்கள் அமைத்துள்ளது.

இவர்கள் சோதனை செய்யும்போது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் கடையின் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடையின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தப்படும். ஆகையால் வேலூரில் இருக்கும் அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடைகளின் முன்பு பொதுமக்களுக்கு தெரியும் வகையில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதில்லை என அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கின்றது.

Categories

Tech |