Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ்…. இசை வெளியீட்டு உரிமம் யாருக்கு போகின்றது…? வெளியான அப்டேட்…!!!

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது.

இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் இந்தியா கைப்பற்றி இருக்கின்றது. இந்த படம் வருகின்ற நவம்பர் மாதம் வெளியாக உள்ளதாகவும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையை கைப்பற்றி இருப்பதாகவும் செய்தி வெளியாகியிருக்கின்றது.

Categories

Tech |