சமந்தாவும் நாக சைதன்யாவும் மீண்டும் இணைய இருக்கின்றார்களாம்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள்.
பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்போது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சமந்தா நடிப்பில் நேற்று முன்தினம் யசோதா திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.
சமந்தாவும் நாகசைத்தன்யாவும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பர்சனல் வேறு, வேலை வேறு. அதனால் இணைந்து நடப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறுகின்றார்களாம். இது பற்றி அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளதாவது, தாங்கள் சேர்ந்து நடித்த படம் ஓடும் என்பது இருவருக்கும் தெரியும். சமந்தா மீது நாகசைத்தன்யாவுக்கு இன்னும் அக்கறை இருக்கின்றது.
அவர் சமந்தாவை தனது தோழியாக எண்ணுகின்றார் என்பது நன்றாக தெரிகின்றது. நடந்தது நடந்து விட்டது என மீண்டும் இணைந்து நடிக்க முடிவு செய்து இருக்கின்றார்கள் என கூறியிருக்கின்றார். சமந்தாவை பிரிந்த பிறகும் நாகசைதன்யா தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தா தான் என கூறியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் சேர வாய்ப்பு இருப்பதாக பேச ஆரம்பித்தார்கள். தற்போது இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்க போகின்றார்கள் என அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றார்கள்.