தமிழகத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த கால அவகாசம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாநில பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் நேற்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகளின் சங்க கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மருத்துவ படிப்பிற்கு தேர்வான மாணவி ஸ்ரீமதிக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதன்பின் மாநில பொதுச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 57 ஆயிரம் பள்ளி வாகனங்கள் இருக்கின்றது.
இந்த வாகனங்களுக்கு பின்பகுதியில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அன்று கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் வேண்டும். இல்லையென்றால் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளார்கள். கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டிருக்கின்றோம். கால அவகாசம் வழங்காத பட்சத்தில் நாளை மறுநாள் சென்னையில் போராட்டம் படுத்தப்பட இருக்கின்றது.
மாணவியின் தற்கொலையை காரணம் காட்டி பள்ளி சேதப்படுத்தப்பட்டு கலவரத்தில் பலர் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்ற அறிவுரைப்படி பள்ளி முழுமையாக சீரமைக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் பள்ளியை திறக்க அனுமதி வழங்கவில்லை. இதனால் பள்ளி மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும். ஆகையால் வருகின்ற 16ஆம் தேதிக்குள் தனியார் மெட்ரிக் பள்ளியை திறக்க அனுமதிக்காவிட்டால் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என 10,000 பேர் பள்ளியை திறக்க அனுமதி வழங்குமாறு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.