பணம் மோசடி செய்ததாக மூன்று பேர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த ராம்குமார், பேபி, மணிமேகலை, பிரசாந்த் உள்ளிட்டோர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தனித்தனியாக புகார் மனு கொடுத்திருக்கின்றார்கள்.
இதில் பாடலூரைச் சேர்ந்த ஒரு தம்பதி மற்றும் சென்னையை சேர்ந்த ஒருவர் என 3 பேர் ராம்குமார் மற்றும் பிரசாந்திடம் வேலை வாங்கி தருவதாக தலா 2 லட்சத்து 50 ஆயிரம், பேபி என்பவரிடம் எல்ஐசி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ஐம்பதாயிரமும் மணிமேகலை என்பவரிடம் 35 ஆயிரமும் பெற்று இருக்கின்றார்கள்.
ஆனால் அவர்கள் இதுவரை வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவதோடு கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றார்கள். ஆகையால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு கூறியுள்ளார்கள்.