Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மின்னல் வருவதை முன்கூட்டியே அறிய… புதிய செயலி அறிமுகம்…. ஆட்சியர் அறிவுறுத்தல்…!!!!

மின்னல் வருவதை முன்கூட்டியே அறிய புதிய செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர் மழை காலங்களில் குடிசை வீடுகள், இடியும் நிலையில் இருக்கும் வீடுகள், தாழ்வான பகுதிகளில் இருக்கும் இருக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். பழுதடைந்த நிலையில் இருக்கும் மின் கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உள்ளிட்டவற்றை சரி செய்யும் போது வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 1077,1800-425-4556 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தற்போது மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதை தவிர்க்கும் வகையில் மின்னல் வருவதை முன்கூட்டியே மக்களுக்கு அறிய செய்திட தாமினி என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதனை மக்கள் அனைவரும் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |