ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜையை முன்னிட்டு கேரளாவுக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதனால் பக்தர்களின் கூட்டம் ரயிலில் அலைமோதும். நெரிசலை தடுப்பதற்காக ஆந்திர மாநிலத்தில் உள்ள நரசபூரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளா கோட்டயத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. அந்த வகையில் நரசபூர்-கோட்டையம் சிறப்பு ரயில் வருகின்ற வெள்ளிக்கிழமை நரசபூரிலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடைகின்றது.
பின் அங்கிருந்து 7:25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் வழியாக அடுத்த நாள் காலை 05.30 மணிக்கு கோட்டையம் சென்றடைகிறது. பின்னர் மறுமார்க்கமாக கோட்டயத்தில் இருந்து சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக இரவு 10:30 மணிக்கு சேலம் வந்திருக்கின்றது. பின் அங்கிருந்து 10.32 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி வழியாக மறுநாள் சென்றடைகின்றது என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.