Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்திலுள்ள 11 சட்டசபை தொகுதிகளில்…. வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்…!!!!!

சேலம் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக நேற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 சட்டசபையில் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சென்ற 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இதில் 11 சட்டசபை தொகுதிகளிலும் 14,29,231 ஆண்களும் 14,94, 721 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்களாக 248 பேரும் என மொத்தமாக 29,74,250 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருக்கின்றார்கள். திருத்தம் செய்யும் பணி வருகின்ற 8-ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதற்காக சிறப்பு முகாம்கள் நான்கு கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் நேற்று முன் தினம் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஏராளமான வாக்காளர் திருத்தம் செய்வதற்காக அதற்கான படிவங்களை கொண்டு வந்து பூர்த்தி செய்து கொடுத்தார்கள். இதுபோல 18 வயது பூர்த்தி அடைந்த கல்லூரி மாணவ-மாணவிகளும் பெயர்களை சேர்க்க ஆர்வமுடன் வந்தார்கள். சேலத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்ததால் அதிக வாக்குச்சாவடிகளில் மிகக் குறைவான நபர்களே வந்தார்கள். இதனால் அங்கு வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இரண்டாம் கட்டமாக நேற்றும் அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

Categories

Tech |