Categories
சினிமா தமிழ் சினிமா

“சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்ட உதயநிதி”… வருந்தும் ரசிகாஸ்…!!!!

சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்டதால் உதயநிதி ரசிகர்கள் வருத்தப்படுகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். சில மாதங்களுக்கு முன்பாக இவர் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து வருகின்ற 18ஆம் தேதி கலகத் தலைவன் திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சுந்தர்.சி பேசும்போது கூறியதாவது, கலகத் தலைவன் திரைப்படத்தின் ஹீரோவான உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தை இயக்க முயற்சித்தேன்.

ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு சித்தார்த் நடித்தார். அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. பல இயக்குனர்களின் திரைப்படங்களை நம்பிக்கை உடன் வாங்கி வெளியிட்டு வருகின்றார் உதயநிதி. அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என பேசினார். இதைக் கேட்ட ரசிகர்கள் தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் உதய் அண்ணா நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என கூறுகின்றார்கள்.

 

Categories

Tech |