இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகில் இருக்கும் வீரனேந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயப்பிரியா(24) என்ற இளம்பெண் இளையான்குடி வட்டார கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் காலை தனது இருசக்கர வாகனத்தில் காளையார் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தபோது குறுங்களிபட்டி பேருந்து நிலையம் அருகே, அவ்வழியாக வந்த கார் இவரின் வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயப்பிரியா பலத்த காயம் அடைந்தார். பின் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர் அங்கு பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.