Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து லிட்டில் சூப்பர் ஸ்டார்…. பாராட்டு மழையில் லவ் டுடே பட ஹீரோ…!!!!!

லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கு சிம்பு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது.

ரஜினியை தொடர்ந்து சிம்புவிடம் பாராட்டு பெற்ற பிரதீப் ரங்கநாதன் Entertainment பொழுதுபோக்கு

இந்த நிலையில் இத்திரைப்படத்தை பார்த்த ரஜினி, பிரதீப் ரங்கநாதனை வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். தற்போது ரஜினியை தொடர்ந்து சிம்புவும் அவருக்கு கால் செய்து பாராட்டியதோடு பூங்கொத்தையும் அனுப்பி வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை பிரதீப் ரங்கநாதன் வீடியோ எடுத்து தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |