நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் கூறியுள்ளார்.
அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் “லத்தி” என்ற திரைப்படத்தில் நடிகர் விஷால் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை சுனேனா நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இதனை தொடர்ந்து “ராணா புரொடக்சன்ஸ்” சார்பாக இந்த படத்தை ரமணா மற்றும் நந்தா தயாரிக்கின்றார்.
இத்திரைப்படத்தின் டீசர், முதல் சிங்கிள் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய விஷால், தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு வரும் முதல் முகூர்த்தத்தில்தான் நான் திருமணம் செய்து கொள்வேன். 3500 நடிகர்கள், நாடகக் கலைஞர்கள் வாழ்க்கைக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக எனது குழுவினர் உழைத்து வருகின்றார்கள். அவர்களது வாழ்க்கை தரம் உயர்த்த உழைத்து வருகின்றோம். அவர்களுக்கு மருத்துவ வசதி, இன்சூரன்ஸ் வசதிகள் கிடைக்க வேண்டும். கட்டிடம் முடிந்து திருமணம் நடக்கும்போது அனைவரையும் அழைப்பேன் என கூறியுள்ளார்.