புஷ்பா-2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் “புஷ்பா”. இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.
‘புஸ்பா- தி ரூல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்ததிரைப்படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கை சுற்றியுள்ள அடர்ந்த கட்டுப்பகுதியில் நடக்கின்றது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கப் படக்குழு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் புஷ்பா 2 படக்குழு படத்தின் முன்னோட்ட வீடியோவில் அவதார் திரைப்படம் வெளியாகும் பல தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.