உடன்குடி அனல் மின் நிலையத்தில் இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் உடன்குடி காலன்குடியிருப்பில் 2000 ஏக்கர் பரப்பளவில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்த பணி அமைக்க மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மினி இயந்திரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
சுற்றுச்சுவர் கட்டும் பணி ஆனது சுமார் 25 அடி உயரத்திற்கு மேல் முடிந்திருக்கின்றது. நிலக்கரி இறங்குதளம் அமைப்பதற்கு துறைமுகம் அமைக்கும் பணிகள், கடற்கரையில் இருந்து நிலக்கரியை கொண்டு வருவதற்காக ராட்சத இரும்பு கம்பி பாலம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.
இது பற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது, கடற்கரை வழியாக வரும் நிலக்கரியை கடலில் இருந்து நேரடியாகக் கொண்டு வருவதற்கு உயர்மட்ட கம்பி பாலம் அமைக்கும் பணி நிறைவு பெற்ற பின் முதலில் முதல் மின் அலகு சோதனை மின்சாரம் உற்பத்தி ஆரம்பிக்கப்படும்.
தற்போது மின் கோபுரத்தில் கம்பிகள் இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மின் கம்பிகள் செல்லும் பாதையில் தென்னை, பனை, சவுக்கு போன்ற விவசாயத்தை தவிர்ப்பது நல்லது. மேலும் ஆறு அடி உயரத்திற்குள் வளரும் பயிர்களை மட்டும் பயிரிடுவது மிக மிக நல்லது என தெரிவித்துள்ளார்.