தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு சிறுமி ஒருவர் ராக்கி கட்டி வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் 352 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசியாரிடம் மனு கொடுத்தார்கள். மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவுறுத்தினார்.
இதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். பதிலுக்கு குழந்தைகளும் ஆட்சியருக்கு ரோஜா பூக்களை வழங்கினார்கள். அப்போது சிறுமி ஒருவர் ஆட்சியருக்கு ராக்கி கட்டி வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.