Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பிளஸ்-2 மாணவி கர்ப்பம்”… தாலியுடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர்… மடக்கிப்பிடித்து போலீசார் அதிரடி…!!!!!

பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவர் திருப்பூரில் வாடகை வீட்டில் இருந்து அப்பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கின்றார். இவருக்கும் ப்ளஸ்-2 படிக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியிருக்கின்றது. இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்திருக்கின்றார்.

சிறிது நாளில் மாணவியின் வயிறு பெரிதாகியதால் அவரின் பாட்டி சந்தேகம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் மாணவி 3 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதனால் கருவை கலைக்குமாறு பாட்டி மருத்துவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டார்கள். இதனிடையே மாணவியை திருமணம் செய்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் கார்த்திக் தாலியை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்திருக்கின்றார். இதுக்குறித்து தகவல் அறிந்த போலீசார் கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள்.

Categories

Tech |