பள்ளி வளாகத்தில் தேங்கி நின்ற தண்ணீரை வடிகால் அமைத்து மாணவர்கள் வெளியேற்றினார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதுபோல உடுமலை தளிசாலையில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் மழை நீர் வெளியேற முடியாமல் குளம் போல் தேங்கி நிற்கின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி வருகின்ற நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து மாணவர்கள் நேற்று பள்ளிக்கு வந்தார்கள்.
அப்போது சில மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானத்தில் தேங்கி இருந்த மழை நீரை அகற்ற மண்வெட்டியால் நீண்ட தூரத்திற்கு பள்ளம் தோண்டி வடிகால் அமைத்து வெளியேற்றினார்கள். இது போன்ற வேலைகளை மாணவர்களை செய்ய வைக்க கூடாது என உயர் அதிகாரிகள் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ள நிலையில் இந்த வேலைகளை மாணவர்களை செய்ய செய்துள்ளார்கள்.
பிள்ளைகளை பெற்றவர்கள் மழையில் நனையாமல் தேங்கி நிற்கும் தண்ணீரை பாதுகாப்பாக கடக்க வேண்டும் என கூறி பள்ளிக்கு அனுப்புகின்றார்கள். ஆனால் மாணவர்கள் மண்வெட்டி எடுத்துக்கொண்டு தண்ணீரில் இறங்கி வேலை பார்த்து உள்ளார்கள். அப்போது சாரல் மழையும் பெய்து இருக்கின்றது. கழிவறைக்கு செல்லும் வழியிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் மாணவர்கள் தயக்கத்துடன் சென்று வந்தனர்.