பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையாளர் கூறியுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலத்தில் 60 வார்டுகள் இருக்கின்றது. இந்த அனைத்து மண்டலத்திற்கும் சொத்து வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக் கழிவு மேலாண்மை கட்டணம், குத்தகை இனங்கள் உள்ளிட்டவை தினம் தோறும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வசூல் செய்யப்படுகின்றது. இது ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொருந்தாது.
இதில் 2022-23 ஆம் வருடத்திற்கு சொத்துவரி 92 கோடியே 16 லட்சம், காலி இட வரி 7 கோடி 82 லட்சம், தொழில் வரி 2 கோடியே 32 லட்சம், குடிநீர் கட்டணம் 18 கோடியே 14 லட்சம் குத்தகை இனத்தில் 8 கோடி, திடக்கழிவு மேலாண்மை கட்டணம் 5 கோடியே 16 லட்சம், பாதாள சாக்கடை கட்டணம் 1 3/4 கோடி நிலுவையில் இருக்கின்றது. நிலுவைத் தொகையை செலுத்துவதற்காக வருகின்ற 17ஆம் தேதி அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்க இருக்கின்றது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் கூறியுள்ளார்.