Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கார்த்திகை மகா தீபத்திருவிழாவையொட்டி… திருவண்ணாமலையில் அமைச்சர்கள் ஆய்வு….!!!!!

கார்த்திகை மகா தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத மகா தீபத் திருவிழா நடைபெற இருக்கின்றது. தற்போது இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அவர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த பின் பக்தர்கள் செல்லும் பாதை குறுகியதாக இருக்கின்றது. அதிக பக்தர்கள் வரும் போது நெரிசல் ஏற்படும். மேலும் மூச்சுத் திணறலும் ஏற்படும். ஆகையால் கிரிவலப்பாதையை அகலப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கூறினார்.

இதை அடுத்து கோவில் வளாகத்தில் இருக்கும் கோசாலையை ஆய்விட்டார். அங்கே ஒருங்கிணைந்த கோசாலை கட்டிடம் கட்டுவதற்கு 22 லட்சத்தில் அடிக்கல் நாட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதனை பார்வையிட்ட அமைச்சர் கோசாலை பராமரிப்பின்றி இருப்பதால் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மாற்ற வேண்டும் எனவும் அது பக்தர்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். இதனால் அடிக்கல் நாட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நூலக திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு சென்றார் அமைச்சர் சேகர்பாபு. அங்கு நூலகத்தினை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வேலு திறந்து வைத்தார்.

Categories

Tech |