விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்திய கண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதை பார்த்த அங்கிருந்த போலீசார் அவரை அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர் கூறியுள்ளதாவது, கனமழை காரணமானால் என்னுடைய கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரண்டு ஆடுகள் உயிரிழந்தது. நான் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வசித்து வருகின்றேன். நானும் எனது மகன் தினேஷ்குமாரும் மாற்றித்திறனாளிகள்.
ஆகையால் ஆட்சியர் எங்கள் வீட்டை வந்து பார்வையிட்டு வெள்ள நிவாரண உதவி செய்வதோடு அரசு தொகுப்பு வீடும் கட்டித் தர வேண்டும் என கூறினார். மேலும் அவர் கோரிக்கையை வலியுறுத்தி தரையில் படுத்து உருண்டதால் அரசு அதிகாரிகள் அங்கு வந்து அவரை சமாதானப்படுத்தி ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்கள். இதன்பின் அவர் தனது போராட்டத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து சென்றார்.