விழுப்புரம் காவலர் பல்பொருள் அங்காடியில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் காகுப்பத்தில் உள்ள ஆயுத பட வளாகத்தில் காவலர் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்காடியில் இருக்கும் பதிவேடுகள் மற்றும் வரவு-செலவு கணக்குகளை பார்வையிட்டார்.
இதன்பின் அத்தியாவசிய பொருட்கள் உடனுக்குடன் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதையும் கேட்டறிந்தார். இதை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் இருக்கும் சைபர் கிரைம் பிரிவில் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருக்கும் பதிவேடுகளையும் ஆய்வு செய்து நிலுவையில் இருக்கும் வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.