லவ் டுடே திரைப்படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது.
தமிழில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் தெலுங்கில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்தார். அதன்படி நேற்று மதியம் ட்ரைலரை விஜய் தேவரகொண்டா வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எதிர்பாரா விதமாக நேற்று காலை மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா காலமானதால் ட்ரெய்லர் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Due to the unfortunate demise of Super Star Krishna garu, the scheduled launch of #LoveToday Telugu trailer stands postponed. https://t.co/2z4dAbo5JO
— Archana Kalpathi (@archanakalpathi) November 15, 2022