Categories
சினிமா தமிழ் சினிமா

லவ் டுடே-“என்னைவிட்டு உயிர் போனாலும்….” யுவன் குரலில்…. இசையில் உருகும் ரசிகர்கள்…!!!

“என்னை விட்டு உயிர் போனாலும்” பாடல் யுவன் குரலில் வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது.

இத்திரைப்படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய என்னை விட்டு உயிர் போனாலும் பாடல் அனைவரிடமும் வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் யுவன் குரலில் இந்த பாடல் தற்போது வெளியாகி இருக்கின்றது. இப்பாடலை கேட்ட யுவன் ரசிகர்கள் எங்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றது என கமெண்ட்டில் கூறி வருகின்றார்கள்.

Categories

Tech |