நடிகை ரகுல் பிரீத் சிங் உடற்பயிற்சி குறித்து பேசி உள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்த வரும் கதாநாயகிகளில் ஒருவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான என். ஜி. கே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளதாவது, உடற்பயிற்சி என்பது எனது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். நீ ஒன்றும் குண்டாக இல்லையே உடலை ஏன் இப்படி வருத்திக் கொள்கின்றாய் என பலரும் என்னிடம் கேட்கின்றார்கள்.
உடற்பயிற்சி என்பது உடலில் இருக்கும் கொழுப்பை குறைத்துக் கொள்வதற்கு என யார் சொன்னது? உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதற்காகவே உடற்பயிற்சி செய்கின்றேன். ஒரு நாள் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் ஏதோ ஒரு குறை இருக்கும். நீங்களும் உங்களுக்காக உடற்பயிற்சி செய்யுங்கள். அப்போது தான் ஆரோக்கியம், ஆனந்தம் உருவாகும். அதற்காக நாள் முழுவதும் ஜிம்மிலேயே கழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. பச்சை பசேல் என இருக்கும் தோட்டங்களிலும் செய்யலாம். மனம் ஆனந்த தாண்டவம் ஆடும். இதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் என கூறியுள்ளார்.