Categories
உலக செய்திகள்

தும்சம் செய்த கொரோனா…. ”இத்தாலியில் ஒரே நாளில் 889 பேர் பலி” உயிரிழந்தோர் 10,023ஆக உயர்வு …!! 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இத்தாலியில் தொடர் மரணம் நிகழ்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 657,434 பேர் பாதித்துள்ளனர். 141,419  பேர் குணமடைந்த நிலையில் 30,420 பேர் உயிரிழந்துள்ளனர். 485,595 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 25,248 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

கொரோனா வைரசால் தாக்கத்தால் நேற்று மட்டும் 889 பேரை இழந்து தவிக்கும் இத்தாலி தொடர்ந்து போராடி வருகின்றது. இத்தாலியில் இதுவரை 10,023  பேர் பலியாகியுள்ள நிலையில் 92,472 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12,384 பேர் குணமடைந்து வீடு திரும்பினாலும், 70,065 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3,856 பேர் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றனர்.

Categories

Tech |