தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்ற 2008 ஆம் வருடம் மும்பையில் கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தினார்கள். இதன்பின் கடலோர பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆகையால் கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படும். இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார், தீவிரவாதிகள் போல வேடமணிந்து முக்கிய பகுதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவார்கள். அந்த வகையில் நேற்று காலை முதல் சீவிஜில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதற்கு கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் தலைமை தாங்க இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். இரண்டாவது நாளான இன்று தூத்துக்குடியில் இருந்து 6 கடல் மைல் தொலைவில் சந்தேக படும்படி இரண்டு விசைப்படகுகள் இருந்தது. இதனால் ரோந்து பணியில் இருந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். படகில் மொத்தம் 15 பேர் இருந்தார்கள். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது தீவிரவாதிகள் போல வேடம் அணிந்து தூத்துக்குடியை தாக்க வந்தது தெரிந்தது. இதன்பின் போலீசார் 15 பேரையும் கைது செய்தார்கள். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்றும் நடைபெற்றது.