Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை‌”… நடுக்கடலில் மடக்கிப்பிடித்த கடலோர காவல்படை…!!!!!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற 14 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தார்கள்.

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுகின்றது. இதனால் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் 60 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமாக நான்கு படகுகள் நின்று கொண்டிருந்தது. இதனால் கடலோர காவல் படையினர் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு இந்திய படகுகளும் இரண்டு இலங்கை படகுகளும் அங்கிருந்தது.

இந்த படகுகளில் இலங்கையை சேர்ந்த ஆறு பேரும் இந்தியாவை சேர்ந்த எட்டு பேரும் இருந்தார்கள். மேலும் படகுகளில் வெள்ளை நிற சாக்கு மூட்டைகள் அடக்கி வைக்கப்பட்டிருந்ததால் போலீசார் சோதனை செய்ததில் 3.7 டன் பீடி இலை மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. இதை தூத்துக்குடி மீனவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காகவும், இதை வாங்குவதற்காக இலங்கை மீனவர்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் தெரிந்தது. இதனால் கடலோர காவல் படையினர் 14 பேரை கைது செய்தார்கள். மேலும் மூட்டைகளை பறிமுதல் செய்தார்கள். சர்வதேச மதிப்பில் ரூபாய் 30 லட்சம் என சொல்லப்படுகின்றது. இது குறித்து கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |