பல்கலைக்கழக கல்லூரி அளவிலான கூடைப்பந்து போட்டியில் வ.உ.சி கல்லூரி வெற்றி பெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 20 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றது. இதற்கான இறுதி போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் கன்னியாகுமாரி ஜெரோம் கல்லூரி அணியும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி அணியும் மோதியது. இதில் 80-55 என்ற புள்ளிக் கணக்கில் வ.உ.சிதம்பரம் கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை கல்லூரி முதல்வர், பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் சேர்ந்து வழங்கினார்கள்.