Categories
சினிமா தமிழ் சினிமா

நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் இறப்பு…. ஜி.வி.பிரகாஷ் உருக்கமாக பதிவு…!!!!

மாணவி பிரியா குறித்து ஜி.வி.பிரகாஷ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து வீராங்கனையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை தான் உயிரிழப்பிற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றார்கள்.

இதனால் பொதுமக்களும் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றார்கள். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, என் கேம் என்னை விட்டுப் போகாது. கம் பேக் கொடுப்பேன். தங்கை பிரியாவின் கடைசி வார்த்தைகள், நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பு இதயம் நெருங்கி போனது. இளம் வீரர்கள் இந்தியாவில் விலைமதிப்பற்ற சொத்துக்கள். அவர்களை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும் என கூறி பதிவிட்டு இருக்கின்றார்.

Categories

Tech |