சுவரில் துளையிட்டு இரும்பு பொருட்களை திருடிய வழக்கில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிபூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை இருக்கின்றது. இங்கு சென்ற 10-ம் தேதி நள்ளிரவில் 12 டன் எடையுள்ள உயர்தர இரும்பு பிளேட்டுகளை மர்ம நபர்கள் சுவரில் துளையிட்டு அதன் வழியாக கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூபாய் 15 லட்சம் ஆகும். ஒவ்வொரு இரும்புப் பிளேட்டாக ஒருவர் எடுத்துச் செல்ல அதை மற்றொரு நபரின் கைக்கு மாறி எடுத்துச் செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கின்றது.
திருடப்பட்ட இரும்பு பிளேட்டுகளை மர்ம நபர்கள் வாகனத்தின் மூலம் அங்கிருந்து கடத்திச் சென்றார்கள். இதை திட்டமிட்டு செய்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் மர்ம நபர்கள் திருடிய பொருட்களை கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு காயலான் கடையில் விற்பனை செய்யப்பட்டதாக கும்முடிபூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த விமல் நேசராஜ் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.