மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி பணத்தை பறித்துச் சென்றுள்ளார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையம் அருகே இருக்கும் கல்பட்டு ஊராட்சியில் உள்ள எம்.ஜி.எம் நகரை சேர்ந்த காயத்ரி என்பவர் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கின்றார். இவரும் ஜோதிமா என்பவரும் சென்ற 14ஆம் தேதி காலையில் பிரபல பைனான்ஸ் நிறுவனத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்கள். பின் அவர்கள் கிராமத்தில் இருக்கும் கனரா வங்கியில் பணமாக பெற்றார்கள்.
இந்த பணத்தை பெற்றுக் கொண்ட காயத்ரி தனது பையில் வைத்துக்கொண்டு பேருந்து மூலம் சென்று இருவரும் கல்பட்டு கூட்டுச்சாலையில் இறங்கினார்கள். இதன்பின் அவர்கள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காயத்ரி மற்றும் ஜோதிமா மீது மோதினார்கள். பின்னர் அவர்கள் கையில் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்கள். இதுகுறித்து காயத்ரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.