Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே…. சரிந்து விழுந்த தடுப்பணை கரைகள்… விவசாயிகள் அச்சம்…!!!!

பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே கொசஸ்தலை ஆற்று தடுப்பணையின் கரைகள் சரிந்து சேதமடைந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அருகே இருக்கும் கொசஸ்தலை ஆற்றில் சென்ற 2021 ஆம் வருடம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை சார்பாக 18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 230 மீட்டர் நீளம் 2 மீட்டர் உயரத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டது. இதன் பணியானது 90% நிறைவடைந்த நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்ற சில நாட்களாகவே திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது.

இதிலும் குறிப்பாக திருத்தணியில் 2 நாட்களுக்கு முன்பாக 13 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது தடுப்பணை வழியாக 700 கன அடி தண்ணீர் வெளியேறி வருகின்றது. தடுப்பணையில் இருபுறங்களிலும் கரையையொட்டி தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் விவசாய நிலங்களில் மழை நீர் வெளியேற்ற முடியாமல் தேங்கி இருக்கின்றது. இதன் காரணமாக கரைகள் சேதமடைந்து ஒரு பக்கம் சரிந்து விழுந்திருக்கின்றது. தடுப்பணை கரைகள் சரிந்து இருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனை விரைவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |