ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்புகளில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலில் அடிக்கடி நகைப் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றது. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தார்கள்.
ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது ஓடும் ரயிலில் பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் போலீசார் கௌரி சங்கர் மற்றும் சூர்யா என்ற இரு இளைஞர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களிடமிருந்த ஏழு பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து சென்னை புழல் சிறையில் அடைதார்கள்.