Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி…‌ இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்…. முதியவருக்கு நேர்ந்த சோகம்…!!!!

கனமழை காரணமால் குடிசை வீடு இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிற்றம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி தேவன் தனது மனைவி முனியம்மாள், மகன் சுரேஷ், மருமகள் நந்தினி, பேரன் சுமித், பேத்தி சுனிதா உள்ளிட்டோருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த தேவன் மீதும் அவரின் மனைவி மற்றும் பேரன் மீது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் சுவரின் ஓரமாக படுத்து கொண்டிருந்த தேவன் மீது அதிக அளவு மண் சரிந்து இடிபாடுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். முனியம்மாள் மற்றும் சுமித் மையப்பகுதியில் படுத்திருந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.

மூன்று பேரும் இடிபாடுகளில் சிக்கியதால் பலரும் கூச்சலிட்டுள்ளார்கள். இவர்களின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷ் மற்றும் அவரின் மனைவியும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்து மூன்று பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே தேவன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |