அனல் மேல் பனித்துளி திரைப்படம் குறித்து ஆண்ட்ரியா பேசியுள்ளார்.
ஜெய்சர் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அனல் மேல் பனித்துளி. இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற 18ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது.
இந்த நிலையில் ஆண்ட்ரியா கூறியுள்ளதாவது, நகருக்கு வரும் பெண்கள் பொதுவெளிக்கு வரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தான் இப்படக்கதை. 11 வயது இருக்கும் போது நான் வேளாங்கண்ணிக்கு பேருந்தில் சென்றேன். அப்போது எனது பின்னாடி இருந்த ஒருவன் எனது சட்டைக்குள் கை நுழைக்க முயற்சி செய்தான்.
நான் எழுந்து முன்னால் சென்று உட்கார்ந்து கொண்டேன். ஒருமுறை கல்லூரிக்குச் செல்லும் போதும் இதுபோன்ற சம்பவம் நடந்தது. தற்போது பேருந்தில் பயணிக்க தேவையில்லாதவளாக நான் இருக்கின்றேன். ஆனால் எல்லா பெண்களுக்கும் அப்படி இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இத்திரைப்படம் பேசுகின்றது. இது இப்படத்திலும் இடம் பெற்று இருக்கின்றது என கூறியுள்ளார்.